25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
சினிமா

மலையாள இளம் இயக்குனர் பாலியல் பலாத்கார வழக்கில் படப்பிடிப்பு தளத்தில் வைத்து கைது!

மலையாள திரையுலகின் இளம் இயக்குனர் லிஜு கிருஷ்ணா, பாலியல் பலாத்கார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லிஜு கிருஷ்ணா இயக்கும் படவெட்டு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.

கண்ணூரில் உள்ள மட்டன்னூரில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து அவர் கைது செய்யப்பட்டார்.

காக்கநாட்டில் வசிக்கும் மென்பொருள் பொறியாளரான இளம் பெண் அளித்த முறைப்பாட்டில் அவர் கைதாகியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் மூலம் இக்குனருக்கும், பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு நெருக்கமாகிள்ளனர். திருமணத்தை காரணம் காட்டி பலாத்காரம் செய்ததாக இயக்குனர்மீது  குற்றம் சாட்ட்பட்டது.

ஜூன் 2020 இல் காக்கநாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும், டிசம்பரில் எடத்தலாவில் உள்ள ஒரு ஹோட்டலிலும், பின்னர் ஜூன் 2021 இல் கண்ணூரில் உள்ள அவரது வீட்டிலும் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் தெரிவித்துள்ளார்.

தனது முறைப்பாட்டை வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) என்ற சினிமா தொடர்பான பெண்கள் அமைப்பில் அளித்தார். WCC அந்தப் புகாரை பொலிசாரடம் வழங்கியது.

WCC உறுப்பினர்கள் கீது மோகன்தாஸ் மற்றும் பார்வதியிடம் (மேலே படத்தில் உள்ளவர்கள்) இன்போ பார்க் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

படவெட்டு சன்னி வெய்ன் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தின் மிகப்பெரிய பட்ஜெட் படத்தின் 90% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கோவிட் காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. இயக்குனரின் கைது நடவடிக்கையால் படப்பிடிப்புக்கு நெருக்கடி ஏற்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment