பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் முறையான வேலைத்திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்படாவிட்டால் தாம் பாரிய சுமைகளை சந்திக்க நேரிடும் என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா, இது தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லையென சுட்டிக்காட்டினார்.
தற்போது டீசல் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த அவர், தாங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1