பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடுமையாக தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட ஜோன் ஜிப்ரிகோவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவரும் நேற்று இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் ஜிப்ரிகோவும், சகோதரியான பல்கலைக்கழக மாணவி ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், நேற்று நோயாளர் காவு வண்டியின் மூலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கைதான இருவர் நேற்று இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சகோதரி இன்று காலையில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஜிப்ரிகோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மல்லாகம் நீதிவான் இன்று வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார். பின்னர், ஜிப்ரிகோ பிணையில் செல்ல உத்தரவிட்டார்.