வவுனியா, பூவரசங்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை வழிமறித்து ரயர் எரித்து இளைஞர் போராட்டம் மேற்கொண்டனர். இதையடுதது, அப்பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் நிலைமையை கட்டுப்படுத்தினர்.
குறித்த பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் தனியார் பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துடன் விபத்துக்குள்ளான பேரூந்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளையும் உடைத்தனர்.
குறித்த விபத்து சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்தவர்களின் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் விபத்து இடம்பெற்ற பகுதியில் இரவு 8.00 மணியளவில் டயரினை எரிந்து போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் அவ்விடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் சென்று நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.