எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடாமல் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான யோசனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தின் போது இந்த பிரேரணை தொடர்பில் கலந்துரையாடி கொள்கை ரீதியான தீர்மானத்தை எட்டவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாச கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் பிற கவலைகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் போட்டியிடுமா என தொகுதி அமைப்பாளர்கள் நேற்றைய கூட்டத்தின் முடிவில் கேள்வி எழுப்பினர்.
அமைப்பாளர்களின் கருத்து என்ன என்று மைத்திரிபால கேள்வி எழுப்பியதற்கு, அவர்கள் சுயாதீனமாக போட்டியிட வேண்டும் என்று பதிலளித்தனர்.
அனைத்து கருத்துக்களையும் பரிசீலித்து முடிவெடுப்போம் என கட்சியின் தலைவர் பதிலளித்தார்.