25.6 C
Jaffna
January 4, 2025
Pagetamil
இலங்கை

கடற்தொழிலாளர்களிற்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த நானும் கச்சதீவு செல்கிறேன்: அமைச்சர் டக்ளஸ்!

காலத்திற்கு காலம் ஐ.நா அறிக்கைகள் வருவதுண்டு. எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (06) வவுனியாவில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

நீண்ட கால இழுபறிக்கு மத்தியில் இலங்கையில் இருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேரும் கச்சதீவுக்கு போகலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஜனாதிபதியுடன் நான் கலந்துரையாடி இரு பக்கத்தில் இருந்தும் நூறு நூறு பேராக கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கின்றேன்.

கச்சதீவுக்கு நானும் செல்வதாக உள்ளேன். ஏனெனில் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவற்காக நானும் செல்வதாக உள்ளேன்.

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய போராட்டங்களின் ஊடாக இலங்கை அரசாங்கம் எல்லைமீறி வந்து மீன்பிடியில் ஈடுபடுபவர்களை தடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு வருபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக அந்த தொழிலாளர்களை விடுவிப்பது என்றும் மறுபுறத்தில் படகுகளை அரசு உடமையாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதாகவும் முடிவெடுத்து அது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதேவேளை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர்கின்றது. எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகின்றார். அப்போது அமைச்சருடனான சந்திப்பு நடைபெறும். அதற்கு முன்னராக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை ஐ.நா ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டபோது,

இது காலத்திற்கு காலம் வரும் அறிக்கையே. ஆனால் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதில்தான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை கூட்டணி கட்சிகளின் அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டு அமைச்சு மாற்றங்கள் இடம்பெற்றமை அரசாங்கத்திற்கு பதிப்பில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் வவுனியாவில் உங்கள் கட்சி ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது பலத்த விமர்சனத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கட்சி ரீதியாக எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள் என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது,

அவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். அதில் சாதக பாதிக நிலைமைகள் உள்ளது. சரியான நிலைமைகளை அறிந்து அவ்வறான நிலைமைகள் தொடராமல் இருப்பதற்கு நாங்கள் முடிவு எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம்

Pagetamil

கிளிநொச்சியில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் 

Pagetamil

கிளிநொச்சி விபத்தில் உயிரிழந்த தாய்க்கும் சேய்க்கும் நீதி கோரி போராட்டம்

Pagetamil

பதக்கம் சின்னத்தில் போட்டியிடவிருக்கும் திலித் ஜயவீர

east tamil

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

Leave a Comment