26.6 C
Jaffna
March 17, 2025
Pagetamil
உலகம்

கருப்பு சல்வாரில் வந்த மனித வெடிகுண்டு: பாகிஸ்தானில் 56 பேர் பலி!

பெஷாவரின் கொச்சா ரிசல்தார் பகுதியில் வெள்ளிக்கிழமை ஷியா மசூதிக்குள் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டதாகவும் 194 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லேடி ரீடிங் மருத்துவமனையின் (எல்ஆர்ஹெச்) செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிம், காயம் அடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்பான சிசிரிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

கருப்பு நிற சல்வார் கமீஸ் அணிந்து, கால்நடையாக வந்த ஒருவர், நகரின் கிஸ்ஸா குவானி பஜாரில் உள்ள மசூதியில் கைத்துப்பாக்கியால் சுட்டது பதிவாகியுள்ளது.

பிரதான நுழைவாயிலுக்கு வெளியே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு காவல்துறையினரை நோக்கி அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் காமடைந்தார்.

தடுக்க முயன்ற ஒரு நபர் மீதும், தற்கொலைதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, வெள்ளிக்கிழமை தொழுகைக்காக வழிபாட்டாளர்கள் கூடியிருந்த மசூதிக்குள் நுழைந்து குண்டை வெடிக்க வைத்தார்.

இந்த தாக்குதலிற்கு சுமார் ஐந்து முதல் ஆறு கிலோகிராம் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போர்நிறுத்தம் பற்றிய புடினின் கருத்துக்கு டிரம்பின் எதிர்வினை

Pagetamil

’30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார்; ஆனால்…’: புடின்

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்!

Pagetamil

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!