25.5 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

ஆளுந்தரப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்!

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த 10 கட்சிகளின் 16 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பத்து கட்சிகளின் தலைவர்களும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, விமல் வீரவன்சவின் கட்சியைச் சேர்ந்த 6 பேர், உதய கம்மன்பிலவின் கட்சி உறுப்பினர்கள் இருவர், வாசுதேவ நாணயக்காரவின் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர், மற்றும் அத்துரலிய ரத்ன தேரர், டிரன் அலஸ், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம்.அதாவுல்லா உட்பட பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட கூட்டறிக்கையை வெளியிடுவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பத்து அம்ச தீர்மானத்தை மகா சங்கத்தின் முன்னணி மதத் தலைவர்களிடம் சமர்ப்பித்து மக்கள் மத்தியில் விநியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த வாரம் கட்சித் தலைவர்கள் கூடி எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அத்துரலியே ரத்தின தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, கலாநிதி ஜீ.வீரசிங்க, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வீரசுமண வீரசிங்க, கெவிது குமாரதுங்க, டிரன் அலஸ் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி, நடத்துனருக்கு கத்திக்குத்து!

Pagetamil

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இராஜினாமா

east tamil

17 இந்திய மீனவர்கள் கைது

east tamil

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

east tamil

மதுசாலைகளை மூடக் கூறி கண்டன பேரணி

east tamil

Leave a Comment