Pagetamil
இலங்கை

3 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடிவிட்டு ரயிலின் முன் பாய்ந்த இளைஞன்: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இன்று மதியம் 1.50 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தின் முன்பாக,  யாழ்ப்பாணம் கோயில் வீதி பகுதியில் பாய்ந்து உயிரை மாய்த்தார்.

கனகரட்னம் வீதி, அரியாலையை சேர்ந்த பரமேஸ்வரன் லக்சன் (25) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் அந்த பகுதிக்கு வந்த இளைஞன், மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு புகையிரதத்தின் பாய்ந்துள்ளார்.

புகையிரதத்தின் முன் பாய்வதற்கு முன்பாக சுமார் 3 நிமிடங்கள் யுவதியொருவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளமை தெரிய வந்துள்ளது.

காதல் விவகாரத்தினால் இந்த மரணம் நிகழ்ந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

3 வருடங்களுக்கு முன் நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

east tamil

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களிடம் கோரிக்கை

east tamil

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

Leave a Comment