யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
இன்று மதியம் 1.50 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தின் முன்பாக, யாழ்ப்பாணம் கோயில் வீதி பகுதியில் பாய்ந்து உயிரை மாய்த்தார்.
கனகரட்னம் வீதி, அரியாலையை சேர்ந்த பரமேஸ்வரன் லக்சன் (25) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் அந்த பகுதிக்கு வந்த இளைஞன், மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு புகையிரதத்தின் பாய்ந்துள்ளார்.
காதல் விவகாரத்தினால் இந்த மரணம் நிகழ்ந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1
1