யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதியொருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம்பெற்றுள்ளது. அதுதொடர்பான கடிதம் எமக்கு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில், புதிய நியமனமொன்று இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய அனைத்து செய்திகளும் பொய்யானவை.
அத்தோடு, “யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு எதிரான முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்துள்ளன” என்ற செய்தி அறிக்கையிடல்களும் போலியானவை என்பதோடு, ஒரு சில சுயலாப ஊடகவியலாளர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் போலிச்செய்திகளே அவை. இந்த போலிச் செய்திகளை ஏனைய ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பிரசுரிப்பதானது அவர்களின் ஊடக அறத்துக்கு விரோதமான செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவிற்கு பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதுது.