யாழில் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
பொன்னாலை – பருத்தித்துறை வீதியில், பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்திலேயே சடலம் மீட்கப்பட்டது.
சடலத்தின் முகம் சிதைவடைந்து அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுகின்றது.
சடலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளும் காணப்படுகிறது.
தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்தவர் விபத்திற்குள்ளாகினாரா அல்லது ஏதேனும் குற்றச்சம்பவமா என்பது தொடர்பில் இளவாலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.