சமூக வலைத்தளங்களின் ஊடாக சிறுமிகள், யுவதிகளை காதல் வலையில் விழுத்தி ஆபாசப்படங்களை வைத்து மிரட்டிய இலங்கை இளைஞருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 13 வருடங்களும், 6 மாதங்களும் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கண்டியை சேர்ந்த ரண்பதி அமரசிங்க (24), தற்போது உயர் கல்விக்காக அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். புதன்கிழமையன்று விக்டோரியன் கவுண்டி நீதிமன்றத்தில் அவருக்கு, 13 ஆண்டுகள் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நவம்பர் 2018 முதல் ஜூன் 2020 வரை அமெரிக்காவில் நான்கு பேர், ஐக்கிய இராச்சியத்தில் ஒருவர் மற்றும் அவுஸ்திரேலியாவில் ஒருவர் உட்பட 11 முதல் 17 வயதுடைய ஆறு சிறுமிகள் தொடர்பான 25 சிறுவர் துஷ்பிரயோக குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.
பதினொரு வயது சிறுமிகள் முதல் 17 வயது வரையான 6 பெண்களை மயக்கி, நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டார்.
அந்த படங்களை விட மேலும் படங்களை அவர் கேட்டுள்ளார். அந்த பெண்கள் எச்சரிக்கையடைந்து, மறுத்தால், ஏற்கனவே அனுப்பிய படங்களை அந்த பெண்களின் குடும்பத்தினருக்கு அனுப்பப் போவதாக மிரட்டியுள்ளர்.
அமெரிக்காவிலுள்ள சிறுமியுடன் பேசத் தொடங்கி, அவரிடம் பெற்றுக்கொண்ட நிர்வாணப் படங்களுக்கு மேலதிகமாகப் படங்களை அனுப்புவதற்கு அவர் மறுத்த காரணத்திற்காக, ஏற்கனவே பெற்றுக்கொண்ட படங்களை பாலியல் தளமொன்றில் பதிவேற்றினார் என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பிட்ட அமெரிக்கச் சிறுமி அமெரிக்கப் பொலீஸில் முறைப்பாடு செய்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 11 வயது சிறுமியுடன் தொடர்பு கொண்டு பாலியல் படங்களை பெற்றார். மேலதிக படங்களை கேட்டபோது அந்த சிறுமி எச்சரிக்கையடைந்து, அவரது தொடர்பை துண்டித்தார். ஜோன் என்ற பெயரில் சிறுமியுடன் அறிமுகமானவர், புதிய புதிய அடையாளங்களுடன் சிறுமியை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளளார்.
அமரசிங்க கிக், ஒமேகல், ஸ்னாப்சொட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகப் பயன்பாடுகளைப் பயன்படுத்தி, பெண்களுடன் தொடர்பு கொண்டார்.
ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரராக இருந்த அமரசிங்க, 11 வயதிலிருந்தே ஒன்லைனில் ஆபாச காட்சிகளை பார்த்ததாகவும், நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்ள போராடினார் மற்றும் “உறுதியான சுயமரியாதை” கொண்டிருந்தார் என்றும் அவரது தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் செப்டம்பர் 2020 இல் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது.
8 வருடங்களும் 6 மாதங்களும் தண்டனை அறிவித்த பின்னர் பரோலுக்கு தகுதி பெறுவார்.