27.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் சேதத்திற்கு ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கு 4.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது கிட்டத்தட்ட 1 பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு உள்ளிட்ட ஏனைய பாதிப்புகளுக்காக காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஊடாக 64 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கோரப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் அடையாளம் காணப்பட்ட 23 தரப்பினருக்கு பெறப்பட்ட நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நேரடியாக பாதிக்கப்பட்ட 15,032 மீனவர் குடும்பங்களுக்கு 7850 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே 4303 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கியதில் நுரைச்சோலை அருகே மூவர் உயிரிழப்பு

east tamil

‘தூய்மையான இலங்கை’ – ஜனவரி 1 முதல் இலங்கையின் மாற்றத்திற்கான முதல் அடி

east tamil

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி

Pagetamil

தமிழ்ச்செல்வன் கடத்தல் வழக்கில் வடமராட்சி ஊடக இல்லத்தின் கண்டனம்

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment