25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

அத்துமீறிய தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடையே இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் அதிலிருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த ரமேஷ், ரோடிக், கெம்பிளேஷ், இமான், அஜித் உள்ளிட்ட 8 மீனவர்களையும் கைது செய்து கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமில் தங்க வைத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து விசாரணைக்கு பின் மீனவர்களை கிளிநொச்சி நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இன்று வரை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் எல்லை தாண்டி குற்றச்சாட்டில் இலங்கை சிறையில் தடுத்து வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து கழற்றி விடப்படும் கட்சிகள் எவை?: ஞாயிறு தீர்மானம்!

Pagetamil

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

Leave a Comment