25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil
கிழக்கு

வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டு காசோலைகள் வழங்கப்பட்டது!

வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நட்டஈட்டு காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (26) திகதி செங்கலடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இளப்பீடுகளுக்கான தேசிய செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நஸ்டஈட்டுக்கான காசோலைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் நிலையில் செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நஸ்ட ஈட்டுக் காசோலைகள் வழங்கும் நிகழ்வானது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நஸ்டஈட்டுக்கான காசோலைகளையும் வழங்கிவைத்திருந்தார்.

இதன்போது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 56 நபர்களுக்கும் 09 வணக்கஸ்தலங்களுக்குமாக 39,71,000 ரூபாய் பெறுமதியான நஸ்ட ஈட்டுக் காசோலைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முற்போக்கு தமிழர் கழகத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர், நஸ்ட ஈட்டுக்காசோலைகளை பெற வருகை தந்திருந்த பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காரைதீவு நேரு சனசமூக நிலைய வருடாந்த ஒன்றுகூடலும், 75 ஆண்டு பவள விழாவும்

east tamil

ஓட்டமாவடி கூட்டுறவு சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா

east tamil

திருகோணமலையில் அதிகூடிய மழைவீழ்ச்சி

east tamil

காலநிலைமாற்றம்: கிழக்கு பாடசாலைகள் முடக்கம்!

east tamil

மட்டக்களப்பில் முந்தணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

east tamil

Leave a Comment