உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரரின் முன்னால் சென்று, ‘உங்களுக்கு எங்கள் நாட்டில் என்ன வேலை?’ என்று கேள்வி எழுப்பிய உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவம், தலைகர் கீவ்வை சுற்றிவளைத்து விட்டது. உக்ரைனின் முக்கிய பாதுகாப்பு கட்டமைப்புக்கள் தகர்க்கப்பட்டு விட்டது. அந்த நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியே “நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம்” என்று வேதனை தெரிவித்துள்ளார். தலைநகரை ரஷ்யப்படைகள் நெருங்கி விட்டதால், தமக்கு உதவும்படி மேற்கு நாடுகளை இறைஞ்சியுள்ளார்.
இந்த நிலையில், உக்ரைனிய பெண்ணொருவரின் துணிச்சல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய இராணுவ வீரரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார் அந்தப் பெண்.
அந்தப் பெண் சற்றும் அஞ்சாமல் ரஷ்ய வீரரிடம் வாதிடுவதை வழிப்போக்கர் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர, அது தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது.
அந்த வீடியோவில் அப்பெண், ஆயுதம் ஏந்திய ரஷ்ய வீரரைப் பார்த்து, ‘நீங்கள் யார்?’ எனக் கேட்கிறார். அந்த வீரர் ‘எங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் அந்தப் பக்கம் செல்லுங்கள்’ எனக் கூறுகிறார்.
‘ஆக்கிரமிப்பாளர்களே… இங்கே உங்களுக்கு என்ன வேலை?’ என்று மீண்டும் அந்தப் பெண் உக்கிரமாகப் பேசுகிறார். அதற்கு அந்த வீரர் நிதானமாக, ‘நமது பேச்சால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செல்லலாம்’ எனக் கூறுகிறார்.
ஆனால் அந்தப் பெண் சற்றும் சமாதானமடையவில்லை.
‘உங்கள் பொக்கெட்டில் கொஞ்சம் சூரியகாந்தி விதையைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீழ்த்தப்படும்போது அந்த விதையாவது வளரட்டும்’ என்று கூறிச் செல்கிறார். )சூரியகாந்தி மலர், உக்ரைன் நாட்டின் தேசிய மலர்)
Ukrainian woman confronts Russian soldiers in Henychesk, Kherson region. Asks them why they came to our land and urges to put sunflower seeds in their pockets [so that flowers would grow when they die on the Ukrainian land] pic.twitter.com/ztTx2qK7kB
— UkraineWorld (@ukraine_world) February 24, 2022
இந்தச் சம்பவம் உக்ரைனின் துறைமுக நகரமான ஹெனிசெஸ்க்கில் நடைபெற்றது. ஹெனிசெஸ்க், கிரிமீயாவில் இருந்து 18 மைல் தொலைவில் உள்ளது.