கடமையின் போது உத்தியோகபூர்வ சீருடையை அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ சீருடையுடன் செருப்புகளை அணிந்து கொண்டு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டது கமராவில் சிக்கியது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதில், ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் செருப்புடன் பணியில் ஈடுபட்டார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அதை வீடியோவாக பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
செருப்புடன் பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தரை சேவையில் இருந்து இடைநிறுத்தியதுடன், குறித்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையையும் பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
1
+1
+1
+1