26.6 C
Jaffna
January 4, 2025
Pagetamil
இலங்கை

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அமைக்கப்பட்டு வரும் யாத்திரிகள் தங்குமிட கட்டுமானப் பணியை இடை நிறுத்த வேண்டாம்: கிராம மக்கள் மகஜர் கையளிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட யாத்திரிகள் தங்கும் இடம் மீள அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த யாத்திரிகள் தங்கும் இடம் அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டாம் என கோரி திருகேதீஸ்வர கிராம மக்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) மன்னாரில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்;.

-மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் பொது மக்கள் மற்றும் யாத்திரிகளின் நன்மை கருதி உரிய அனுமதியுடன் அமைக்கப்பட்டு வந்த குறித்த தங்குமிடத்தின் பணிகள் அண்மையில் எள்ளுப்பிட்டி பகுதியை சேர்ந்த சில மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் குறித்த யாத்திரிகள் தங்குமிடம் சட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டு அமைக்கப்பட்டு வருவதுடன், குறித்த பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் யாத்திரிகர் மடம் ஒன்று காணப்பட்டதாகவும் யுத்தத்தின் போது அழிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது கிராம மக்கள் இணைந்து அப்பகுதி மக்களின் நன்மை கருதியும் அதே நேரத்தில் மத வழி பாடுகளுக்கு வரும் யாத்திரிகர்களின் நன்மை கருதியும் குறித்த யாத்திரிகர் தங்குமிடம் மீண்டும் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

அனைத்து தரப்பினருடைய முழுமையான அனுமதியை பெற்றுக் கொண்டு குறித்த பணிகள் இடம்பெற்று வருகின்ற போதும் எள்ளுப்பிட்டி மக்கள் சிலரது எதிர்ப்பால் குறித்த பணிகள் இடை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே குறித்த அபிவிருத்தி பணியை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை என்பதை தெரிவித்துள்ளதோடு,இவ்வாறான இடையூறுகளை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம் என திருக்கேதீஸ்வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கேதீஸ்வரம் கிராம அபிவிருத்திச் சங்கம்,சிவபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த கிராம மக்களுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் இறுதியாக மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் ஆகியோருக்கு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளதோடு, தமக்கான உரிய தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவித்த மன்னார் பிரதேசச் செயலாளர் குறித்த பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடான நிலை நீடித்து வருகின்ற மையினால் எதிர் வரும் சிவராத்திரி நிகழ்வு நிறைவடைந்த பின்னர் இரு கிராம பிரதிநிதிகளையும் அழைத்து இணக்கப் பாடான கலந்துரையாடல் மூலம் பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக மக்களிடம் பிரதேசச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மாந்தை கிராமத்தில் அரச காணியில் தனியார் நிதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் அபிவிருத்தி பணியை இடை நிறுத்தக்கோரி நேற்று திங்கட்கிழமை (21) காலை மாந்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிராம மக்கள் ஒன்றிணைந்து மன்னார் பிரதேச செயலாளரிடம் அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

77வது சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினர் – பிரதமர் சந்திப்பு

east tamil

பதுளையில் அதிகரித்த நாய்க்கடி விவகாரம்: செல்லப்பிராணிகள் கடிப்பதே அதிகம்!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச் சூடு: ஐவர் இலக்கு – ஒருவர் உயிரிழப்பு!

east tamil

யாழில் மதுபானச்சாலைக்குள் ரௌடிகள் வெறியாட்டம்!

Pagetamil

பசிலின் முறைகேடுகள் பற்றி சிஐடியில் முறையிட்ட வீரவன்ச

Pagetamil

Leave a Comment