அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய சமூக ஊடகச் செயலி நாளை (21) அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.
Truth Social எனும் செயலி அப்பிள் கைத்தொலைபேசிகளில் முதலில் அறிமுகம் செய்யப்படும்.
புதிய சமூக ஊடகத்தைச் சோதித்துப் பார்க்கச் சுமார் 500 பேருக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பயனீட்டாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்குச் சமூக ஊடகத்தின் தலைமை அதிகாரிகளில் ஒருவர் பதிலளித்திருந்தார்.
அதில் சமூக ஊடகச் செயலியின் வெளியீடு குறித்துத் தகவல் வெளியானது.
ஓராண்டுக்குமுன் Facebook, Twitter, YouTube ஆகிய தளங்களில் ட்ரம்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டது.
அதையடுத்துத் தாமே புதிய சமூக ஊடகத்தை உருவாக்கவுள்ளதாக அவர் அறிவித்தார்.
இப்போது Truth Social செயலியின் அறிமுகத்துடன் ட்ரம்ப் மீண்டும் சமூக ஊடகத்தின் பக்கம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.