திட்டமிடப்பட்ட படி இன்றைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருளை இலங்கை மின்சார சபை தற்போது பெற்றுக்கொண்டிருப்பதால், தேசிய மின்கட்டமைப்பை ஸ்திரப்படுத்த பிற்பகல் அவ்வப்போது மின் தடை ஏற்படக்கூடும்.
விநியோக காலத்தில் அவ்வப்போது சுமார் 150 மெகாவோட் பற்றாக்குறை ஏற்படும் எனவும் இதனால் சில இடங்களில் குறுகிய காலத்திற்கு மின்சாரம் தடைபடும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் கவனம் செலுத்தி மாலை 6.00 மணிக்குப் பின்னர் மின்வெட்டு இருக்காது என ரத்நாயக்க தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1