கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
பூநகரி பிரதேச சபையின் கீழ் உள்ள பேருந்து நிலையம் கட்டப்பட்டு அவற்றை மக்கள் பாவனைக்காக பிரதேச சபையிடம் வைக்கப்பட்ட போது அவ் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாமையால் வர்த்தகர்கள் பாதிப்பு தொடர்பாக பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய முடியும் என பிரதேச சபையின் தவிசாளரிடம் உறுதியளித்துள்ளார்.
இதேபோன்று கடற்றொழில் ஈடுபடுபவர்களின் குறை நிறைகளையும் கெளதாரி முனை சென்று மீனவர்களுடன் இந்தியா மீனவர்களின் பிரச்சனைகள் எதுவும் இருக்கிறதா என்றும் கடற்றொழில் ஈடுபடுபவர்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
இதேவேளை, கச்சதீவு திருவிழா தொடர்பாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பிய போது, கடந்த வருடம் போன்று இந்த வருடமும் கொரோனா காரணமாக பூசகர்கள் மாத்திரம் சென்று பூஜை வழிபாடு செய்ய வேண்டிய நிலை வரும் போல இருப்பதாக தெரிவித்தார்.