25.8 C
Jaffna
December 12, 2024
Pagetamil
குற்றம்

புதையல் தோண்டியவர் சிக்கினார்!

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை(15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும் அடம்பன் பொலிஸார் இணைந்து குருவில் வான் பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி பொருட்கள் இராணுவம் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தப்பியோடிய சந்தேக நபர்கள் 6 பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment