27.6 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

இரணைதீவில் கைதான இந்திய மீனவர்களிற்கு பெப்.25 வரை விளக்கமறியல்!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று (12) 2 படகுகளை கைப்பற்றிய கடற்படையினர், 12 மீனவர்களை கைது செய்திருந்தனர்.

12 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்த நிலையில், இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரணியம் முன்னிலையில் மீனவர்கள் முற்படுத்தப்பட்டனர்.

அவர்களை இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த மீனவர்களின் விபரங்களை யாழ் இந்தியத்துணைத்தூதரக அதிகாரிகள் பெற்று அவர்களுக்கு தேவையான, உணவு, உடை என்பவற்றை வழங்கியிருந்தனர்.கு

கைதான மீனவர்கள் 12பேரும் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

மைத்திரியின் மன்னிப்பு பெற்றவரை நாடு கடத்தி வர இன்டர்போலின் உதவி

Pagetamil

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

Leave a Comment