28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இந்தியா

46 மணித்தியாலமாக மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞன் மீட்பு!

கேரளாவில் மலை இடுக்கில் 46 மணித்தியாலங்கள் சிக்கி தவித்த பாபு என்ற இளைஞர் மீட்கப்பட்டுள்ளார்.

பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, செங்குத்தான பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதை தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.

இதை தொடர்ந்து ஹெலிகொப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை ஹெலிகொப்டர் மூலம் கடற்படையினர் மீட்க மேற்கொண்ட போது முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதனை தொடர்ந்து இந்திய இராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியது.

இதனையடுத்து தகை வெலிங்டன், பெங்களூரில் இருந்து வந்த மலையேற்ற பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள், மலை இடுக்கில் 46 மணி நேரமாக சிக்கி உள்ள பாபுவை நெருங்கிய ராணுவ வீரர்கள் அவருக்கு உணவு, தண்ணீர் வழங்கினர்.

பின்னர், பாபுவிற்கு பாதுகாப்பு பெல்ட் அணிவித்து 400 மீட்டர் உயரத்துக்கு தூக்கினர்.

இளைஞரின் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கஞ்சிக்கோடு தளத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

Leave a Comment