இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தொற்று மட்டும் காரணமல்ல என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் தானும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.
மின் உற்பத்திக்கான எரிபொருளை வழங்குவது சாத்தியமில்லை என எரிசக்தி அமைச்சர் ஒருவர் கூற வேண்டிய அவசியமில்லை எனவும், அதற்கு உரிய அமைச்சர்களே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1