Pagetamil
தொழில்நுட்பம்

8 ஆண்டுகளுக்கு பின் லோகோவை மாற்றிய கூகுள் குரோம்

கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது.

கூகுள் நிறுவனம் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, தனது குரோம் லோகோவை மாற்றியுள்ளது. லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இதில் உள்ள சிவப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டு நிழல்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக லோகோ அதிக மாற்றங்கள் இன்றி அதேசமயம் நேரலை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

புதிய மாற்றங்களின் படி விண்டோஸ், மைக் ஓஎஸ் என ஒவ்வொரு தளங்களிலும் குரோம் ஓஎஸ் வித்தியாசமாக காட்சியளிக்கும். மைக் ஓஎஸ் சாதனங்களில் லோகோ 3டி தோற்றம் பெற்று இருக்கிறது. மைக் ஓஎஸ் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கூகுள் குரோம் பிரவுசரில் பீட்டா ஐகன் காட்சியளிக்கிறது.

கூகுள் குரோம் வடிவமைப்பாளரான எல்வின் ஹு, தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவை வெளியிட்டு லோகோவின் மறுவடிவமைப்பு காட்சியையும் வழங்கியுள்ளது.

அதில் ”பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் சில நிழல்கள் அடுத்ததாக வைப்பது விரும்பத்தகாத வண்ண அதிர்வுகளை உருவாக்கியது. எனவே, ஐகனுக்கு மிகவும் நுட்பமான மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

8 ஆண்டுகளில் முதல் முறையாக குரோமின் பிராண்ட் ஐகன்களைப் புதுப்பிக்கிறோம். புதிய ஐகன்கள் விரைவில் உங்கள் சாதனங்களில் தோன்றத் தொடங்கும். குரோம் தோற்றம் வெவ்வேறு இயக்க முறைமைகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

குரோமில் மீதமுள்ள சிஸ்டம் ஐகன்களின் தோற்றத்துடன் பொருந்த, சாய்வுகள் இல்லாமல் பிரகாசமான வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளன. மைக் ஒஎஸ்சில் அவை 3டி ஆக இருக்கும். பீட்டாவுக்கு வண்ணமயமாக உருவாக்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

புதிய லோகோ பெப்ரவரி 4 முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதனை தற்போது குரோம் கலரியில் காண கிடைக்கிறது. அடுத்த சில மாதங்களில் மற்ற அனைவருக்கும் இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 மற்றும் 11 பதிப்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன.

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!