28.9 C
Jaffna
April 4, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

முகக்கவசத்தை கழற்றாமலே இனி அப்பிள் தொலைபேசிக்குள் நுழைய வசதி!

முக அடையாளத்தைக் கொண்டு அப்பிள் தொலைபேசிக்குள் நுழைந்து, பயன்படுத்துவதற்கு புதிய வசதி அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிற்கு முன்னர், முக அடையாளத்தின் மூலம் அப்பிள் தொலைபேசிக்குள் நுழைவதில் சிக்கலிருக்கவில்லை.

ஆனால்,  இப்போதோ முகக்கவசம் அணிந்தவாறு கைத்தொலைபேசியைத் திறப்பது

சாத்தியமில்லை.

அப்பிள் தொலைபேசியை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் முகக்கவசத்தைக் கீழே இறக்க வேண்டும். அல்லது, மறைச்சொல்லை அழுத்த வேண்டும்.

தற்போது முகக்கவசம் அணிந்தவாறே அப்பிள் தொலைபேசிக்குள் நுழைய வழி கிடைத்துள்ளது.

iOS 15.4 எனும் மென்பொருள்வழி அது சாத்தியமாகுமாம்.

தற்போது உருவாக்கப்படும் மென்பொருளின் முன்னோடிப் பதிப்பில் அத்தகைய அம்சம் இருப்பது தெரியவந்துள்ளது.

அப்பிள் கைத்தொலைபேசிகள் இனி முழு முகத்தையே அடையாளம் காணாமல் கண்களைச் சுற்றியுள்ள இடத்தை மட்டுமே அடையாளம் காணும் என்று கூறப்பட்டுள்ளது.

அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு மூக்குக் கண்ணாடிப் பயன்படுத்துவோருக்கும் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சில ஊடகங்கள் கூறின.

புதிய அம்சத்தை iPhone 12 அல்லது அதற்குப்பின் வெளியிடப்பட்ட கைத்தொலைபேசி ரகங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

Apple Watch கைக் கடிகாரம் கொண்டு முகக்கவசம் அணிந்தவாறே iPhone-ஐ திறக்கும் அம்சம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!