25.4 C
Jaffna
December 29, 2024
Pagetamil
கிழக்கு

ஹபாயா அணிந்த ஆசிரியை தாக்கப்பட்டதற்கு எதிராக கிண்ணியாவில் போராட்டம்!

ஹபாயா அணிந்து பாடசாலை சென்ற ஆசிரியை தாக்கப்பட்டமையை கண்டித்து கிண்ணியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் இன்று (03) பிற்பகல் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

திருகோணமலை சண்முக இந்து கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியை தாக்கப்பட்டமை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக செயற்பட்ட பாடசாலை நிர்வாகத்திற்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிண்ணியா அதிபர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இப் போராட்டத்தை
முன்னெடுத்தனர்.

மாணவர் மனதில் இனத்துவேசம் விதைக்காதே, மாற்றுமத கலாச்சாரத்தை மதி, தமிழ் முஸ்லிம் உறவை பிடிக்காதே போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கிண்ணியா வலயக் கல்விப் பணிமனை முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

-பதுர்தீன் சியானா-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பசுமை புகையிரதமாக 4வது இடத்தில் திருகோணமலை

east tamil

கிழக்கு மாகாண ஆளுநருடன் திருகோணமலை வேலையில்லா பட்டதாரி நிர்வாக, ஏற்பாட்டுக் குழுவினர் சந்திப்பு

east tamil

பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேக நபர்கள் கைது

east tamil

கல்லடி Bridge Market தீக்கிரை

east tamil

பசுமையான திருகோணமலை திட்டத்தின் கீழ் மர நடுகை – ஹரிதரன் தன்வந்த்

east tamil

Leave a Comment