பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனும் சென்று ஆதரவினை வழங்கியுள்ளனர்.
அத்தோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாசும் சென்று மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகின்ற இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் பிரதிநிதிகளும் தமது ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுப்பர் மடத்தில் நடக்கும் மீனவர் போராட்டத்தில் கட்சி அரசியல் புகுந்துள்ளதாக மீனவர் சங்கங்களும் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.