ஹபாயா அணிந்து பாடசாலை சென்ற ஆசிரியை தாக்கப்பட்டமையை கண்டித்து கிண்ணியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் இன்று (03) பிற்பகல் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
திருகோணமலை சண்முக இந்து கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியை தாக்கப்பட்டமை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக செயற்பட்ட பாடசாலை நிர்வாகத்திற்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிண்ணியா அதிபர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இப் போராட்டத்தை
முன்னெடுத்தனர்.
மாணவர் மனதில் இனத்துவேசம் விதைக்காதே, மாற்றுமத கலாச்சாரத்தை மதி, தமிழ் முஸ்லிம் உறவை பிடிக்காதே போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கிண்ணியா வலயக் கல்விப் பணிமனை முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
-பதுர்தீன் சியானா-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1