கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து நேற்று (30) மீன்பிடிக்கச் சென்ற காவத்தமுனை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய அச்சி முகம்மது ஆதம் பாவா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆழ்கடலில் வைத்து மீனவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் மீனவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1