27.2 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

நாவற்குழியில் விபத்து: பேருந்திலிருந்து இறங்கிய பெண் பரிதாப பலி!

யாழ்.நாவற்குழி பகுதியில் சற்று முன் நடந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நொக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் ஏ-9 வீதி நாவற்குழி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.

அங்கு இறங்கிய பெண் வீதியோரமாக இருந்த மண் பிட்டியில் கால் வைத்த போது கால் தடுமாறி வீதியில் விழுந்துள்ளார்.

குறித்த பெண் வீதியில் விழுந்ததை கவனிக்கத குறித்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.

இதன் போது விதியில் விளுந்த பெண்ணின் தலை பேருந்தின் பின் பக்க சில்லில் நசியுண்டது.

உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்ட பெண் பட்ட ரக வாகனத்தின் உதவியுடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக வைதியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் சாவகச்சேரி வைதிய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

east tamil

விளம்பரங்களில் சிறுவர்களை பயன்படுத்த தடை

east tamil

துப்பாக்கியுடன் மாயமான திருகோணமலை கடற்படைச் சிப்பாய்!

Pagetamil

ரணில் அரசு இடைநிறுத்திய மின்சாரசபையின் 62 ஊழியர்களுக்கும் மீண்டும் பணி!

Pagetamil

யாழ், காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

Leave a Comment