விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ படத்தில் சிம்ஹா கதாபாத்திரத்துக்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது, ‘ஜிகிர்தண்டா’ படத்தின் அசால்ட் சேது கதாபாத்திரத்தை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகான்’. லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. ‘மகான்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்துளனர்.
கடந்த சில தினங்களாகவே இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் படக்குழு இதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தது. இந்நிலையில், ‘மகான்’ திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் பெப்ரவரி 10ஆம் திகதியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது ‘மகான்’ படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக போஸ்டரில் சத்யவான் என்ற கதாபாத்திரத்தில் சிம்ஹா நடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிம்ஹாவின் தோற்றம் ‘ஜிகிர்தண்டா’ படத்தின் அசால்ட் சேது கதாபாத்திரத்தை நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
Simha as SATHYAVAN in #Mahaan#MahaanOnPrime @actorsimha @7screenstudio @PrimeVideoIN #Sathyavan pic.twitter.com/nFcMccxI6G
— karthik subbaraj (@karthiksubbaraj) January 27, 2022