கொழும்பு துறைமுகத்தில் 37,500 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றி வந்த இரண்டு கப்பல்களிலிருந்து, எரிபொருளை இறக்கும் பணி தொடங்கியுள்ளது.
வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மின் உற்பத்திக்காக 10,000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை நாளாந்தம் 1500 மெட்ரிக்தொன் எரிபொருளை கோரியதால் எட்டு நாட்களுக்கு போதுமான டீசல் இருப்புக்கள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.
துறைமுகத்தில் இரண்டு கப்பல்களை விடுவிக்க இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலர்களை வழங்கியதாக எரிசக்தி அமைச்சர் கூறினார்.
அமைச்சர் கம்மன்பில மற்றும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோரின் முரண்பாடான கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, பிரச்சினையை உள்நாட்டில் தீர்த்துக்கொள்ள முடியுமானால், அது தனிப்பட்ட முறையில் கையாளப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.
உள்ளக விவாதத்தின் முடிவு குறித்து மட்டுமே பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்