25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

ஓமந்தை அரச அலுவலகர்களிற்கான வீடமைப்பு திட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை!

வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் பிரிவில் 234 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள அரச அலுவலர்களுக்கான வீடமைப்புத் திட்ட காணிகளை, உரியவர்களிற்கு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வருமாறு-

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள சோலைக்காடு எனும் பெயருடைய காணியை அரச அலுவலர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டத்திற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஒப்படைத்தல்ழ்வவுனியா பிரதேச செயலகப் பிரதேசத்தில் ஓமந்தை கிராம அலுவலர் பிரிவில் 92.92 ஹெக்ரெயார் (234 ஏக்கர் 02 ரூட் 10 பேர்ச்சர்ஸ்) அளவு கொண்ட காணியில் அரச அலுவலர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் அக்காணியில் 711 காணித் துண்டுகள் பிரதேச செயலாளரின் பரிந்துரைக்கமைய அடையாளங் காணப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 215 குடும்பங்களுக்கு வீடமைப்புக்காக 500,000/-ரூபாய்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி 09 வருடங்கள் கடந்தாலும் குறித்த பயனாளிகளுக்கு இதுவரை அக்காணிகளுக்கான உறுதி வழங்கப்படவில்லை. அதனால், குறித்த பயனாளிகளுக்கு காணி உரிமமாற்று உறுதிப்பத்திரங்களை வழங்கும் வகையில் குறித்த காணியை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஒப்படைப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

18ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

Pagetamil

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

Leave a Comment