கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அடங்கிய ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.
இந்த மனுக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் திகதி விசாரணைக்கு வந்தது.
கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரஸ் என்ற நிறுவனத்திற்கு மாற்றியமைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1