ராகமவில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடியபோது பொதுமக்களிடம்சிக்கி, நடுவீதியில் கழுத்தை அறுத்து தறகொலை செயதவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக பொருட்களை திருடியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல்பொருள் அங்காடிக்கு வந்த நபர், குழந்தைகளுக்கான பேபி க்ரீம் மற்றும் கொலோன் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பொருட்களுடன் அவர் முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்டுள்ளார். அவர் பொருட்களை திருடிக் கொண்டு ஓடிவருவதை தெரிந்து கொண்ட முச்சக்கர வண்டி சாரதி, அங்கிருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளார்..
திருடனை பிடிக்க முற்பட்ட சாரதி, கத்திக் குத்திற்கு இலக்கானார்.
காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த மற்றுமொரு குழுவினர் சந்தேக நபரை விரட்டிச் சென்று சுற்றிவளைத்தனர்.
யாரேனும் தன்னை நெருங்கினால் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டிய அந்த நபர், கையில் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துள்ளார்.
சந்தேக நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபர் ராகமவில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் வசிப்பவர் எனவும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் சகோதரியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்ததில், அவர் திருமணமாகாதவர் என்பதும், போதைப்பொருள் பாவனைக்காக பொருட்களை திருடியதும் தெரியவந்தது.