அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அதனை சுட்டிக்காட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தற்போது நிலவும் உர நெருக்கடிக்கு அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஒரு அறுவடை காலத்துக்குள் உரம் தொடர்பான புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், அதனை செய்ய முடியாதென்பதை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், விடய அமைச்சர் இணங்கி புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
பெரும்போகத்தில் உரங்களை வழங்க முடியாவிட்டால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
விவாதங்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறிய அவர், அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்கள் இது குறித்து விவாதித்ததாகவும் கூறினார்.
எவ்வாறாயினும் அவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அல்ல, தீர்வுகளை காண்பதற்காகவே தனித்தனியாக இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் கூறினார்.
அரசாங்கம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும் வரை அனைத்து விஷயங்களுக்கும் உடன்படாமல், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கூறினார்.