27.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
கிழக்கு

ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோறளைப்பற்று பிரதேசசபை ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்!

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்த்தர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சந்தேக நபர் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக அறிந்த இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களது கோரிக்கையினை கேட்டறிந்து கொண்டார்.

இவ்விடயத்திற்கு தீர்வு கானும் முகமாக வாழைச்சேனை பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக இராஜங்க அமைச்சர் தலைமையில் பிரதேச சபை சபா மண்டபத்தில் தவிசளார் சோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை உதவி பொலிஸ் அதிகாரி பிரதேச சபை ஊழியர்கள் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

அரச ஊழியர்களின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் மக்களோடு மக்களாக களப் பணியில் ஈடுபடுவர்கள். அவர்கள் சென்று வரும் இடங்களில் கடமைக்கு இடையூறு இடம்பெறாது, ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தர் உட்பட 3 ஊழியர்களது கைது தொடர்பாக பொலிசாரின் எதிர்கால நடவடிக்கை, பொலிசாரின் ஒத்துழைப்பு, பொலிசார் குறித்த காணி தொடர்பான விடயத்தில் முறைப்பாடு பதிவு செய்வதில் இழுத்தடிப்பு மேற்கொண்டமை, தவிசாளர் மற்றும் பிரிவு கிராமசேவகர் செய்த முறைப்பாட்டிற்கு பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காமை போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இவ்விடயங்களை கேட்டறிந்து கொண்ட பொலிசார் ஊழியர்களது பாகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாகவும், 03 ஊழியர்களது பெயர் விபரங்களை முறைப்பாட்டுக்காரர் பதிவு செய்துள்ளதாகவும் இவர்களது கைது விடயம் தொடர்பாக தவிசாளர், சபை செயலாளர் மற்றும் வாழைச்சேனை நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர்களுடன் கலந்துரையாடப்படும், ஊழியர்களுடன் பொலிசார் கைது விடயம் தொடர்பாக தொடர்பு கொள்ளமாட்டார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது தவிசாளரின் பணிப்பிற்கமையவே ஊழியர்கள் கடமைக்கு சென்றதாகவும் அவர்களை கைது செய்ய இடமளிக்கப்போவதில்லை என்றும் இல்லையேல் தன்னை கைது செய்யுமாறு பொலிசாரிடம் தவிசாளர் கேட்டுக்கொண்டார்.

சந்தேக நபர் வாழைச்சேனை ஆதரா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக நபர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் அவரை நீதிமன்று கொண்டு செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசாரினால் நீதிமன்றத்திற்கு சமர்பித்த அறிக்கைக்கு அமைய குற்றம் சுமத்தப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் சம்பவம் தொடர்பாக அறிய வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எச்.எம். ரம்சின் வைத்தியசாலைக்கு நேரடியாக சென்று குறித்த வழக்கின் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

சந்தேக நபரின் சட்டத்தரணியின் அறிக்கைக்கு அமைய ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதுடன் இதன் வழக்கு எதிர்வரும் 07.02.2022 ஆம் திகதி இடம்பெறும் என பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் அரசகாணி விடயத்திற்கு தீர்வு கான வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் தினமொன்றில் உதவி பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர்களுடன் இராஜங்க அமைச்சர் கலந்துரையாடலொன்றை மேற்கொள்வது என பல்வேறு விடயங்கள் கலந்துரையடப்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்-

தங்களது ஊழியர்கள் 3 பேர்களது பெயர் பொலிஸ் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களது பெயர் விபரம் முறைப்பாட்டில் இருந்து நீக்கப்படும்போது தங்களது போராட்டமும் நிறுத்தப்படும் என்றும் அவ்வாறு இல்லையேல் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

கடந்த 6ஆம் திகதி வியாழக்கிழமையன்று வாழைச்சேனை பெற்றோல் நிலையச் சந்திக்கு அருகாமையில் ஆலையடி வளவு என அழைக்கப்படும் காணியினுள் பிரதேச சபையின் அனுமதியின்றி வியாபார நடவடிக்கைக்காக சட்டவிரோத தற்காலிக கொட்டில் அமைக்கும் பணி இடம்பெற்று வந்ததாகவும் அதனை அகற்றுவதற்கு சென்ற பிரதேச சபை ஊழியர்களை அக்காணிக்கு உரிமை கோரும் நபர் தாக்கி கல்லால் எறிந்ததாகவும் இதில் காயமுற்ற சபை ஊழியர் ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குற்றவாளியை கைது செய்யுமாறு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இவ் காணியானது கடந்த காலத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்ததாக பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது. தற்போது ஓட்டமாவடியைச் சேர்ந்தவர் தனது காணியென உரிமை கோருகின்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை மீண்டும் சிக்கியுள்ளது – கோவிந்தன் கருணாகரம்

east tamil

மட்டக்களப்பில் திறக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயம்

east tamil

கசிப்பு உற்பத்தி சந்தேக நபர் கைது

Pagetamil

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

Pagetamil

திருகோணமலை மாவட்ட மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சந்திப்பு

east tamil

Leave a Comment