கொழும்பு, கிராண்ட்பாஸ், ரந்திய உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் 17 வயது மாணவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.,
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 17 வயதான அப்துல் லத்தீப் என்ற இளைஞனே கொல்லப்பட்டார்.
நேற்று முன்தினம் (3) ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு தனது நண்பர்களுடன் குறித்த இளைஞன், மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அவர்களை பின்தொடர்ந்து வந்த மற்றுமொரு தரப்பினர், ரிக்ரொக் வீடியோ தொடர்பில் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவ்விளைஞனின் அடிவயிற்றில் குத்தியுள்ளனர்.
தப்பிச்சென்ற 6 பேரும் நேற்று (04) கைது செய்தயப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 16 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 3 பேர் பாடசாலையில் கல்வி கற்கிறார்கள். மற்றையவர்கள் கல்வியை இடைநிறுத்தியவர்கள்.