இலங்கையின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும் உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அந்த நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடும் பொறுப்பு அமைச்சரவை அமைச்சர்கள் குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை ஒரு அமைச்சரிடமும், ஒரு நாடு அல்லது ஒரு நிறுவனத்துடன் கலந்தாலோசிக்க அமைச்சர்கள் குழுவிடமும் பொறுப்பை வழங்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1