27.6 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

சுகாதார தொழிலாளியை தாக்கிய வியாபாரி: சுன்னாகம் பிரதேசசபை ஊழியர்கள் போராட்டம்!

சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று காலை 9 மணியளவில் பகிஸ்கரிப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இணுவில் ஆரம்ப பாடசாலை முன்பாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் அனுமதி பெறாது நடைபாதையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவரை, நேற்று அங்கிருந்து அப்புறப்படுத்த முற்பட்டவேளையில், குறித்த வியாபாரியால் வருமானவரி பரிசோதகர், சுகாதார பரிசோதகர் அச்சுறுத்தப்பட்டதோடு, பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளி மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தவிசாளரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆனாலும் குறித்த பகுதியில் இன்றும் தொடர்ந்து வியாபாரம் நடைபெறுவதாக
தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் பொலிசார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.

அதேவேளை குறித்த பகுதியில் வியாபாரம் இன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்ஷன் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

மைத்திரியின் மன்னிப்பு பெற்றவரை நாடு கடத்தி வர இன்டர்போலின் உதவி

Pagetamil

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன?: டக்ளஸ் கேள்வி!

Pagetamil

Leave a Comment