தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாறன்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்துக்குப் பிறகு தமிழ் -தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமானார். இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் தே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷுடன் சம்யுக்தா மேனன், சாய் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.