எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் உரிய முறையில் செயற்படாததன் காரணமாகவே நாட்டில் எரிவாயு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இவர்களால் தான் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பொறுப்புகளை ஏற்றவர்கள் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு பத்தரமுல்லையில் உள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று (3) இடம்பெற்ற வைபவத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலைகளின் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் நேற்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு அமைச்சு தீர்வு காண வேண்டும் எனவும், அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னேற்றத்திற்காக தீவிரமான தீர்மானங்கள் கூட எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படாவிடின் தேக்க நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.