திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை கடித்து உயிரிழந்துள்ளார்.
நேற்று (1) இந்த சம்பவம் நடந்தது.
மண்டானை திருக்கோவில் 4 பிரிவைச் சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்தி (55) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1