களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டபூர்வமற்ற கணவரிடம் ஒப்படைப்பதற்காக கால்சட்டையில் நூதனமாக ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து எடுத்து வந்த கர்ப்பிணிப் பெண்ணொருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் அவ்சாவளை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் கர்ப்பிணித் தாய் ஆவார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சட்டபூர்வமற்ற கணவரைச் சந்திக்க சந்தேகப் பெண் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் சிறைக்காவலர்கள் மேற்கொண்ட சோதனையின் போது, அவரது கால்சட்டையின் ஓரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 990 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபருடன் அவரது 6 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகன்களும் சென்றுள்ளனர்.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.