பதுளை மாநகர சபையின் மேயர் பிரியந்த அமரசிறி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண ஆளுநர் ஜே. எம். முஸம்மில் இந்த உத்தரவினை விடுத்துள்ளார்.
பதில் மேயராக பிரதி மேயர் அசித்த நளிந்த ரங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரியந்த அமரசிறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராவார்.
பிரியந்த அமரசிறியின் மேயர் பதவியின் கீழ், மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் தோற்கடிக்கப்பட்டதுடன், 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்த பின்னர் வாக்கெடுப்பு நடத்தாமல் சபையை விட்டு வெளியேறியிருந்தார்.
பதுளை மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 9 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 3 உறுப்பினர்களும் உள்ளனர்.