புகையிலைக்கு அடிமையான ஆண்களின் சதவீதம் 2015ல் 15 சதவீதத்தில் இருந்தது தற்போது 9.01 சதவீதமாக குறைந்துள்ளது. புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிகாரசபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ,
நாட்டில் 2015ஆம் ஆண்டு 45.7 வீதமாக இருந்த புகையிலை பாவனை இன்றைய நிலவரப்படி 36.2 வீதமாக குறைந்துள்ளது. தினமும் 60 ஆண்கள் புகையிலை தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று கூறினார்.
புகையிலை பாவனையானது அகால மரணங்களுக்கு வழிவகுக்கிறது என்றும் உலகளவில் எட்டு மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் கூறினார்.
இது கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட மிக மோசமானது என்று அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1