விதிமுறைகளை மீறி அமைச்சரவை பத்திரங்களின் ஊடாக அதிபர்களை நியமிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
போட்டிப் பரீட்சை நடத்தாமல் நேர்காணல் மூலம் மாத்திரம் அதிபர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடைமுறை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அந்த சங்கம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
நேர்முகத்தேர்வுகள் தனித்துவத்தை வெளிப்படுத்துவதால், போட்டிப் பரீட்சையின்றி நியமனங்கள் வழங்கப்படுமாயின், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என அரச ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1